Jul 18, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சி பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்: துன் ஃபைசல்
தற்போதைய செய்திகள்

பாஸ் கட்சி பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்: துன் ஃபைசல்

Share:

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் நிலைத்தன்மைக்கும் நற்பெயர்க்கும் பாஸ் கட்சியின் செயல்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அக்கட்சி கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ துன் ஃபைசால் இஸ்மாயில் அஜிஸ் கூறியுள்ளார்.

பாஸ் கட்சி முடிவெடுப்பதில் தாமதம் காட்டுவதோடு, கூட்டணிக்கு ஒரு சுமையாக மாறிவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

அம்னோவுடன் இணைந்து முவாஃபக்காத் நேஷனல் கூட்டணியைப் புதுப்பிக்க பாஸ் ஆர்வம் காட்டுவதையும், கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் பெரிகாத்தான் நேஷனல் சின்னத்திற்குப் பதிலாகத் தனது சொந்தச் சின்னத்தைப் பயன்படுத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பாஸ் கட்சி விசுவாசமின்றி நடப்பதாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் அடையாளத்தைக் காக்க பாஸ் தானாகவே வெளியேறித் தனித்துச் செயல்படுவதே நல்லது என்று துன் ஃபைசால் தெரிவித்துள்ளார்.

Related News