Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஈரானில் பதட்ட நிலை – மலேசியர்களை வெளியேற்ற 13 மணி நேர தரை வழி பயண ஏற்பாட்டை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஈரானில் பதட்ட நிலை – மலேசியர்களை வெளியேற்ற 13 மணி நேர தரை வழி பயண ஏற்பாட்டை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்தது

கோலாலம்பூர், ஜூன்.20-

ஈரான்-இஸ்ரேல் பதட்டங்களால் ஈரானில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள், அருகிலுள்ள துருக்மெனிஸ்தானை அடைய 13 மணி நேரப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார். ஈரானியத் தலைநகரான தெஹ்ரானில் இருந்து அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டதால், நிலப்பரப்பு வழியாக மலேசியர்களை வெளியேற்றும் பணிகளை அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

தெஹ்ரானிலிருந்து சுமார் 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துருக்மெனிஸ்தானின் தலைநகரான அஷ்காபாட் பாதுகாப்பான பயணத்திற்கான அடுத்த இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. துருக்மெனிஸ்தான் அரசுடன் இணைந்து, மலேசியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான அனைத்து அனுமதிகளையும் விசாக்களையும் பெற்றுள்ளதாக முகமட் ஹசான் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →