May 22, 2026
Thisaigal NewsYouTube
வெ.23,000 மதிப்பிலான பெட்ரோலிய எரிவாயு கலன்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

வெ.23,000 மதிப்பிலான பெட்ரோலிய எரிவாயு கலன்கள் பறிமுதல்

Share:

கெடா, மே 09-

கெடா, சுங்கை பெட்டானி, கவாசன் பெருசாஹான் சுங்காய் லாலாங் -கில் உள்ள ஒரு வளாகத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் பெட்ரோலிய எரிவாயு கலன்களை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சகம் கைப்பற்றியுள்ளது.

எரிவாயு கலன்களின் உள்ள வாயுவின் அளவு குறைவாக இருப்பதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரை அடுத்து அவ்விடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.

அச்சோதனையில் 14 கிலோகிராம் மற்றும் 12 கிலோகிராம் எடையுள்ள 94 எரிவாயு கலன்கள், ஒரு லாரி உட்பட சில வணிக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஆர்மிசான் முகமட் கூறினார்.

மேலும், 42 வயதுடைய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அவரிடமிருந்து 23,000 வெள்ளி ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆர்மிசான் முகமட் குறிப்பிட்டார்.

Related News