May 24, 2026
Thisaigal NewsYouTube
முகைதீனை தற்காப்பதற்கு 7 வழக்கறிஞர்கள்
தற்போதைய செய்திகள்

முகைதீனை தற்காப்பதற்கு 7 வழக்கறிஞர்கள்

Share:

கோத்தா பாரு, ஆகஸ்ட் 26-

தமக்கு போதுமான எம்.பி.க்களின் ஆதரவு இருந்தும், நாட்டின் பிரதமராகுவதற்கு மாமன்னர் தம்மை அழைக்கவில்லை என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது தொடர்பில் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நாளை செவ்வாய்க்கிழமை கிளந்தான் குவா முசாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

பெரிக்காத்தான் நேஷனலின் தலைவருமான முகைதீனை தற்காப்பதற்கு 7 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் களம் இறங்கவிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கறிஞர் குழுவில் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தகியுதீன் ஹாசன்- னும் களம் இறங்கவிருக்கிறார் என்று பெர்சத்து கட்சியின் கிளந்தான் மாநில தலைவர் கமருதீன் முஹமட் நோர் தெரிவித்துள்ளார்.

அந்த வழக்கறிஞர் குழுவிற்கு யார் தலைமையேற்பார் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News