ஜாசின், டிசம்பர்,05-
போலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவர், தாம் தங்கியிருந்த வாடகை வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று மதியம் 12 மணியளவில் அந்த மாணவர், மலாக்கா, தாமான் மெர்லிமாவ் எமாஸில் உள்ள வாடகை வீட்டின் கட்டிலில் இறந்து கிடந்தது குறித்து போலீசர் தகவல் பெற்றதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் லீ ரோபர்ட் தெரிவித்தார்.
அவ்விடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அந்த மாணவரைச் சோதனை செய்த போது, அவர் இறந்து விட்டதை உறுதிச் செய்தனர். 19 வயது முகமட் ஸுல் ஹாகிமி என்ற அந்த மாணவர், வாடகை வீட்டில் இதர 13 மாணவர்களுடன் தங்கிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
மாணவரின் மரணத்தில் குற்றத்தன்மைக்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று அவர் விளக்கினார்.








