Oct 16, 2026
Thisaigal NewsYouTube

குகேஷ் தொம்மராஜு-விற்கு வாழ்த்து மாலைகள் குவிந்து வருகின்றன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குகேஷ் தொம்மராஜு-விற்கு வாழ்த்து மாலைகள் குவிந்து வருகின்றன

சிங்கப்பூர், டிச.13-


தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் தொம்மராஜு, உலக சதுரங்க விளையாட்டுப் பேட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த Ding Liren- னை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மூலம் அவருக்கு இந்திய உட்பட உலகமும் முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நேற்று சிங்கப்பூர் செந்தேசா தீவில் நடைபெற்ற கிளாசிக்கல் உலக சதுரங்க விளையாட்டுப் போட்டியில் குகேஷ் வென்றது மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை அவர் இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வந்து பெருமை சேர்த்துள்ளார் என்று இந்திய அதிபர்,பிரதமர் உட்பட முன்னனி தலைவர்கள் வர்ணித்துள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் குகேஷ் பல சாதனைகளை பதிவு செய்துள்ளார். இளம் வயதில் உலக சதுரங்க விளையாட்டுப்போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமைக்குரியவாக குகேஷ் மாறியுள்ளார்.

உலக சதுரங்கப் போட்டியில் சாம்பியனாக விளங்கிய ரஷ்யாவின் காஸ்பரோவ், கடந்த 1995 ஆம் ஆண்டில் தமது 22 வயதில் உலக சதுரங்க விளையாட்டுப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தற்போது, குகேஷ், அந்த சாதனையை முறியடித்து தமது 18 ஆவது வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும் இந்தப்பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியராக குகேஷ் விளங்குகிறார். இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், 5 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற 18 ஆவது உலக சதுரங்க விளையாட்டுப்போட்டியில் 18 வயது நிரம்பிய குகேஷ் சாம்பியன் பட்டத்தை பெற்றது, அந்த 18 எண்ணுக்கு உரிய தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளதாக பலர் வர்ணித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →