Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு ஒப்பந்த முறையில் ஆசிரியர்கள்
தற்போதைய செய்திகள்

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு ஒப்பந்த முறையில் ஆசிரியர்கள்

Share:

தற்போது பள்ளிகளில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு ஒப்பந்தம் அல்லது குத்தகை முறையில் ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதற்கு கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளதாக கல்வி தலைமை இயக்குநர் டத்தோ பிகேஹாருடின் கசாலி தெரிவித்துள்ளார்.

தற்காலிக ஆசிரியர்கள் என்ற நிலையில்லாமல் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் வ​ரையில் பணியாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுடன் கல்வி அமைச்சு ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளும். இதன் மூலம் தற்போது நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறைப்பிர​ச்னைக்கு ​தீர்வு காண முடியும் என்று டத்தோ பிகேஹாருடின் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆசிரியர் பணிக்கான காலி இட​ங்களை நிரப்புவதற்கு அண்மையில் 9,552 பேர் கிரேட் டிஜி41 இன் ​கீழ் நிரந்தர ஆசிரியர்களாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதை தவிர ஒப்பந்த முறையிலும் ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவதற்கு கல்வி அமைச்சு தற்போது உத்தேசித்தள்ளதாக டத்தோ பிகேஹாருடின் கசாலி குறிப்பிட்டுள்ளார்.

Related News