Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலை நிர்மாணிப்பு மோசடியில் நிதியை இழந்த முன்னாள் துணையமைச்சர்
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலை நிர்மாணிப்பு மோசடியில் நிதியை இழந்த முன்னாள் துணையமைச்சர்

Share:

கோலாலம்பூர், ஜூலை 03-

நாட்டில் நிதி சார்ந்த பல வகையான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

தற்போது புதிதாக, இல்லாத நெடுஞ்சாலை நிர்மாணிப்பு திட்டத்தை நம்பி, 250 ஆயிரம் வெள்ளியை இழந்துள்ளார், பெயர் கூற விரும்பாத முன்னாள் துணையமைச்சர் ஒருவர்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தலைமையிலான அரசாங்கத்தில் துணையமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார்.

நிதியமைச்சுக்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பின் கீழ், அந்த நெடுஞ்சாலை திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் -மின் உறவினர் என்றும் கூறி, மோசடி பேர்வழிகள் அவரை ஏமாற்றியுள்ளனர்.

கட்டுமான பொருள்களை பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு நிறுவனம் தேவைப்படுவதாக ஏமாற்றுப்பேர்வழிகள் கூறியதை நம்பிய அவர், அந்த குத்தகையை பெறுவதற்கான கட்டணமாக 250 ஆயிரம் வெள்ளியை செலுத்தியுள்ளார்

தனக்கு தெரியாமல், தனது மகன் அத்தொகையை செலுத்தியதாகவும், அதன் பின்னரே, அப்படியொரு நெடுஞ்சாலை நிர்மானிப்பு திட்டம் இல்லாததை தாம் கண்டறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு பெர்லிஸ், பாடாங் பெசார்-ரிலிருந்து பேராக், சங்காட் ஜெரிங் வரையில், சுமார் 276 கிலோமீட்டர் தூரத்தை உட்படுத்தி கட்டப்படவிருந்த நெடுஞ்சாலை திட்டம், இறுதியில் கைவிடப்பட்டது.

அத்திட்டத்தை பற்றி நன்கு அறிந்துள்ள ஏமாற்றுப்பேர்வழிகள், அத்திட்டத்தின் பெயரில், அந்த மோசடியைப் புரிந்துள்ளனர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்