Jul 31, 2026
Thisaigal NewsYouTube
15 மாத குழந்தை மூழ்கி இறந்தது
தற்போதைய செய்திகள்

15 மாத குழந்தை மூழ்கி இறந்தது

Share:

ரந்தாவ் பஞ்ஞாங்,தாமான் ராந்தாவ் பாரு- வில் 15 மாத ஆண் குழந்தை சதுப்பு நிலத்தில் மூழ்கி இறந்தது.

நேற்று மதியம் 2.20 மணியளவில் ஃபிர்டாவுஸ் முஹமாட் ஃபைசால் - என்கிற அக்குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாக ரந்தாவ் பஞ்ஞாங் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் ஷாபாவி ஸ்தாபா தெரிவித்தார்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த அக்குழந்தையின் உடல் நீர் மீட்பு குழுவினரால் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சவப் பரிசோதனைக்காக பசிர் மாஸ் மருத்துவமனைக்கு அக்குழந்தையின் உடல் கொண்டு செல்லப்பட்டதாக ஷாபாவி ஸ்தாபா குறிப்பிட்டார்.

Related News