Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கைக்காக போலீஸ் காத்திருக்கிறது

Share:

மலாக்கா, ஜூன் 18-

கடந்த ஜுன் 9 ஆம் தேதி, மலாக்கா, மஸ்ஜித் தானா, ஜெராம் தேசியப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பயணித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு இரண்டு ஆசிரியர்கள் உட்பட நால்வர் பலியான சம்பவம் தொடர்பில் சவப்பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாக பகாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

மேல் நடவடிக்கைக்காக அந்த அறிக்கையை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அந்த அறிக்கையை முறைப்படுத்த வேண்டியுள்ளது. இவை அனைத்தும் நிறைவுப்பெற்றப் பின்னரே இந்த விபத்திற்கு காரணமானவர்களை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்ட இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கோர விபத்தில் இரண்டு ஆசிரியர்கள், பேருந்து துணை ஓட்டுநர் மற்றும் பள்ளி நிர்வாக உதவி அதிகாரி ஆகியோர் உயிரிழந்ததுடன் 30 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

பேருந்து ஓட்டுநர் சொற்ப காயங்களுக்கு ஆளாகியுள்ள வேளையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று டத்தோ நூர் ஹிசாம் தெரிவித்தார்.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு