Aug 13, 2026
Thisaigal NewsYouTube
கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
தற்போதைய செய்திகள்

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

Share:

திரெங்கானு மாநிலம், புலாவ் கபாஸ் கடற்கரையில் ஹெலிகாப்டர் ஒன்று மிகத் தாழ்வாக பறந்ததால், அதன் காற்றழுத்தத்தில் மணல் மற்றும் பொருட்கள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடங்களில் வெளியான காணொளி ஒன்றில், அந்த ஹெலிகாப்டரானது, கடற்கரைக்கு மிக அருகில் தரையிறங்க முயன்றது போல் பறந்ததைக் காண முடிகின்றது.

இதனால் மணல் மேகம் போல் பறந்ததுடன், சுற்றுலாப் பயணிகளின் உணவு மற்றும் தனிப்பட்ட பொருட்களும் சிதறின.

இச்சம்பவத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பலரும், மக்கள் அதிகமாக கூடிய பகுதியில் ஹெலிகாப்டரை இயக்கியது பொறுப்பற்ற செயல் எனக் குற்றம்சாட்டியதுடன், மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமான சிஏஏஎம் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை சிஏஏஎம் அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் வெளியிடவில்லை.

Related News

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது