Oct 16, 2026
Thisaigal NewsYouTube

புக்கிட் ரெமா நீர் பயனீட்டாளர்களின் பிரச்னை 2 வாரத்தில் தீர்க்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புக்கிட் ரெமா நீர் பயனீட்டாளர்களின் பிரச்னை 2 வாரத்தில் தீர்க்கப்படும்

தானாமேரா, டிச.5-


கிளந்தான், தானா மேரா, புக்கிட் ரேமா, நீர் சுத்திகரிப்பு மையத்துடன் தொடர்புடைய 13 ஆயிரம் நீர் பயனீட்டாளர்களின் குடிநீர் பிரச்னை, இன்னும் இரண்டு வாரத்தில் தீர்க்கப்படும் என்று ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் தெரிவித்துள்ளது.

இப்பிரச்னை இரண்டு வார காலத்திற்குள் தீர்க்கப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நீர் விநியோகம் செய்வதற்கு வியூகம் நிறைந்த பகுதிகளில் குடிநீரை விநியோகிப்பதற்கு 15 கொள்கலன் லோரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. தவிர, 26 கொள்கலன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்பான் தலைமை செயல்முறை அதிகாரி கர்னல் டத்தோ அகமட் பைஸால் தெரிவித்தார்.

இந்த லோரிகள் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி முதல் சேவையை தொடங்கியுள்ள வேளையில் இப்பிரச்னை தீர்க்கப்படும் வரையில் தொடர்ந்து சேவையில் இருக்கும் என்று டத்தோ அகமட் பைஸால் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →