ஜார்ஜ்டவுன், டிசம்பர்.13-
தற்கொலை போன்ற சம்பவங்களுக்கு இடருக்கு உரிய பகுதியாகக் கருதப்படும் பினாங்கு பாலத்தில் பாதுகாப்புப் பணிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று மூடா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
பினாங்கு மாநிலத்தில் அதன் முதன்மையான பாலம் உட்பட நீர் நிலைகளில் 24 மணி நேரத்தில் மூன்று தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று மூடா கட்சியின் பினாங்கு மாநிலக் கொள்கை வகுப்புப் பிரிவுத் தலைவர் தர்ம மணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஓராண்டில் பினாங்கு பாலத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். விபத்து, கவனக்குறைவு, மனோரீதியான பாதிப்பு போன்ற காரணங்களால் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.








