Apr 23, 2026
Thisaigal NewsYouTube
மதுபோதையில் இராணுவ அதிகாரி விபத்து: இ-ஹெய்லிங் பயணி பலி
தற்போதைய செய்திகள்

மதுபோதையில் இராணுவ அதிகாரி விபத்து: இ-ஹெய்லிங் பயணி பலி

Share:

கோலாலம்பூரில் லெபு ராயா மாஜு எனும் MEX அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 31 வயது இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். அவர் ஓட்டி வந்த கார் தவறான திசையில் நுழைந்து, எதிரே வந்த இ-ஹெய்லிங் வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், இ-ஹெய்லிங் வாகனத்தில் பயணம் செய்த 22 வயது வெளிநாட்டு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். KLIA-வில் இருந்து வந்த மேலும் இரு வெளிநாட்டுப் பெண்கள் மற்றும் 41 வயது ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சோதனையில் இராணுவ அதிகாரி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மது அருந்தியது உறுதியானது. தற்போது அவர் மீது சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவின் கீழ் மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

Related News

நெகிரி செம்பிலான்  சமஸ்தானபதி  நீக்கம் செல்லாது: சட்ட வல்லுநர்கள் கருத்து

நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி நீக்கம் செல்லாது: சட்ட வல்லுநர்கள் கருத்து

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தல விவகாரங்கள்: சிலாங்கூர் அரசின் சீரிய அணுகுமுறையில் சுமூகத் தீர்வு

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தல விவகாரங்கள்: சிலாங்கூர் அரசின் சீரிய அணுகுமுறையில் சுமூகத் தீர்வு

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தொடக்க விழா: நான்கு 'உண்டாங்' தலைவர்கள் பங்கேவில்லை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தொடக்க விழா: நான்கு 'உண்டாங்' தலைவர்கள் பங்கேவில்லை

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 4 முக்கிய திட்டங்கள்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 4 முக்கிய திட்டங்கள்: அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

தனிநபர் கடன்களால் அதிகரிக்கும் திவால் நிலை: மீட்பு நடவடிக்கையில் இறங்கியது அரசாங்கம்

தனிநபர் கடன்களால் அதிகரிக்கும் திவால் நிலை: மீட்பு நடவடிக்கையில் இறங்கியது அரசாங்கம்

83 வயது மூதாட்டியின் 2011-ஆம் ஆண்டு உயில் செல்லாது: அப்பீ்  நீதிமன்றம்  தீர்ப்பு

83 வயது மூதாட்டியின் 2011-ஆம் ஆண்டு உயில் செல்லாது: அப்பீ் நீதிமன்றம் தீர்ப்பு