Sep 27, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான்  சமஸ்தானபதி  நீக்கம் செல்லாது: சட்ட வல்லுநர்கள் கருத்து
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி நீக்கம் செல்லாது: சட்ட வல்லுநர்கள் கருத்து

Share:

நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி யாங் டி-பெர்துவான் பெசார், துங்கு முஹ்ரிஸ் இப்னி அல்மர்ஹும் துங்கு முனாவீர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக மாநிலத்தின் நான்கு ‘உண்டாங்’ பாரம்பரியத் தலைவர்கள் அறிவித்தது, சட்டப்படி செல்லாது என்று முன்னாள் நீதிபதி முகமட் ஹிஷாமுடின் யூனுஸ்– சும், வழக்கறிஞர் மாலிக் இம்தியாஸ் சர்வார்ரும் வாதிடுகின்றனர்.

சமஸ்தானபதிக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை. மேலும் அவர் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அந்த சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சமஸ்தாபதி துங்கு முக்ரிஸ் நீக்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்ட சுங்கை உஜோங் 'உண்டாங், முபாரக் தோஹாக், ஏற்கனவே ‘உண்டாங்’ பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதால், அவர் அந்த அறிவிப்பில் பங்கேற்றது நடுநிலையானது அல்ல என்று அந்த சட்ட வல்லுநர்களான முகமட் ஹிஷாமுடின் யூனுஸ் – சும், மாலிக் இம்தியாஸ் சர்வார்ரும் வாதிடுகின்றனர்.

மேலும் நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இத்தகைய அறிவிப்பில் மாநில மந்திரி பெசாரின் கையொப்பம் அவசியம். ஆனால், மந்திரி பெசார் அமினுடின் ஹருண் இதில் பங்கேற்கவில்லை என்பதோடு, இந்த அறிவிப்பை அங்கீகரிக்கவும் மறுத்துவிட்டார்.

விசாரணை மற்றும் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாததால் இந்த அறிவிப்பு சட்டரீதியாக அமல்படுத்தப்பட முடியாது என்று அந்த சட்ட நிநிபுணர்கள் தங்கள் வாதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related News

நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி நீக்கம் செல்லாது: சட்ட வல்... | Thisaigal News