Sep 27, 2026
Thisaigal NewsYouTube
தனிநபர் கடன்களால் அதிகரிக்கும் திவால் நிலை: மீட்பு நடவடிக்கையில் இறங்கியது அரசாங்கம்
தற்போதைய செய்திகள்

தனிநபர் கடன்களால் அதிகரிக்கும் திவால் நிலை: மீட்பு நடவடிக்கையில் இறங்கியது அரசாங்கம்

Share:

மலேசியாவில் 2021 முதல் 2026 மார்ச் வரை 31,517 பேர் திவால் நிலையை அடைந்துள்ள நிலையில், அதில் 46 விழுக்காடு வழக்குகள் தனிநபர் கடன்களால் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 15 விழுக்காட்டினர் 34 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திவால் நிலையில் இருப்பவர்களுக்குப் புதிய வாழ்வு அளிக்க 'இரண்டாவது வாய்ப்பு கொள்கை' மூலம் கடன் வரம்பை 2 லட்சம் ரிங்கிட்டாக உயர்த்தி அரசாங்கம் உதவி வருகிறது.

குறிப்பாக, மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடமைப்புத் திட்டங்களால் கடனாளியானவர்களுக்கு இதன் மூலம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

Related News