ஈப்போ, அக்டோபர்.24-
பேராக் மாநிலம் மஞ்சோங், லாருட், மாத்தாங் மற்றும் செலாமா ஆகிய மாவட்டங்களில் நேற்று பல மணி நேரங்கள் பெய்த கனமழை காரணமாக அப்பகுதிகளைச் சேர்ந்த 1,776 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் 23 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
லாருட், மாத்தாங் & செலாமா மாவட்டத்தில் மட்டும் 35 கிராமங்களுக்கும் மேல் இந்த கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், இன்று வெள்ளிக்கிழமை எல்எம்எஸ், உலு பேராக், கோல கங்சார், கிந்தா மற்றும் ஹிலிர் பேராக் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.








