சிரம்பான், தாமான் சிரம்பான் ஜெயாவில் கார் ஒன்று எரிக்கப்பட்டது தொடர்பில், விசாரணைக்கு உதவும் வகையில் இரு ஆடவர்களைப் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை காலை 4.30 மணியளவில், தாமான் சிரம்பான் ஜெயாவில் உள்ள தமது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார், 50 விழுக்காடு வரை எரிந்திருந்ததாக, 19 வயதுடைய ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி. நந்தா மரூஃப் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைதுசெய்யப்பட்ட 17 மற்றும் 22 வயதுடைய அவ்விரு ஆடவர்களும், எளிதில் எரியக்கூடிய என சந்தேகிக்கப்படும் திரவம் ஒன்றை காரின் மீது வீசிவிட்டு தப்பி ஓடியதாக நந்தா மரூஃப் குறிப்பிட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 435 பிரிவின் கீழ், அவ்விரு ஆடவர்களும் குற்றச் சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


