அரசாங்கத் துறையில், பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு மார்ச் மாதம் வரை, அந்நிய நாட்டவர்கள் உட்பட சுமார் 46 ஆயிரம் பேர் போலி அடையாளக் கார்டு மற்றும் இதர போலி ஆவணங்களைச் சமர்பித்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பம் செய்கின்ற மனுதாரர்களின் விண்ணப்பங்களில் இணைக்கப்படும் அடையாளக் கார்டு நகலை அடிப்படையாக கொண்டு தேசிய பதிவு இலாகாவில் சோதனை செய்யப்பட்ட போது, 46 ஆயிரம் பேர் போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
அரசு வேலைகளுக்கு ஆள் எடுக்கும் பொதுச் சேவை இலாகா, எப்போதுமே தேசிய பதிவு இலாகாவான jpn னுடன் அணுக்கமான தொடர்பில் இருப்பதால் இந்த மோசடிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


