Oct 14, 2026
Thisaigal NewsYouTube

ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு விரைவில் தீர்வு- கோபிந்த் சிங்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

குவாந்தான், பிப்.24-

நெடுங்காலமாகச் சொந்தக் கட்டடம் இல்லாமல் இயங்கி வந்த , பகாங், குவாந்தான், ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு விரைவில் தீர்வு காணப்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபித் சிங் டியோ உறுதியாகக் கூறினார்.

இன்று பள்ளி மேளாலர் வாரியம், சங்கங்களின் பதிவு அலுவலகமான ROS- ஸில் முறையாகப் பதிந்து கொண்டது.

பள்ளி மேளாலர் வாரியம், ஆர்.ஓ.ஸ் எனப்படும் சங்கப் பதிவு இலாகாவில் பதிவு பெறச் சிக்கலை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று அதற்கு நல்லதொரு வழி கிடைத்திருப்பதாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

இலக்கவியல் அமைச்சு, கல்வியமைச்சின் ஒத்துழைப்போடு செயல்பட்டதன் வழி, பதிவு இலாகாவில் பள்ளி மேலாளர் வாரியம் முறையாகப் பதிந்து கொண்டதாக அமைச்சர் தமதறிக்கையில் தெரிவித்தார்.

ROS இன் கீழ் இதுவரை பதிவு செய்யப்படாத பள்ளி மேலாளர் வாரியமான LPS நிலை காரணமாக இந்த பள்ளி நிரந்தர கட்டடம் கட்டுவதில் தாமதத்தை எதிர்கொண்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்குடன் தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சினை குறித்து கலந்துரையாட சிறப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தேன். இந்த கூட்டத்தில் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி எதிர்கொள்ளும் சவால் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

அதன் விளைவாக இன்று, ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் வெற்றிகரமாக ROS இல் பதிவு செய்துள்ளது.

இந்த வளர்ச்சியை நான் வரவேற்கிறேன். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளோம். பள்ளி அதன் சொந்தக் கட்டடத்தில் இயங்குவதற்கான உடனடித் தீர்வைக் காண நாங்கள் இப்போது கல்வி அமைச்சுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று இலகக்வியல் அமைச்சர் கோபிந்த் சிங் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நெடுங்காலமாக முறையான கற்கும் வசதியின்றி, கெபினில் இயங்கி வந்த ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி விவகாரம் பலரது கண்டனத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான முதற்கட்ட தீர்வாக இந்த ஆர்.ஓ.எஸ் பதிவு நடைபெற்றுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு