கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-
நாட்டின் 68 ஆவது சுதந்திர தின விழா மற்றும் 62 ஆவது மலேசிய தினம் ஆகிய கொண்டாட்டங்களையொட்டி அரச மலேசிய போலீஸ் படையின் போக்குவரத்து சம்மன்களுக்கு 50 விழுக்காடு வரை கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது.
அரச மலேசிய போலீஸ் படை மற்றும் மைடிஜிட்டல் ஐடி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் உள்துறை அமைச்சு இந்தச் சலுகையை வழங்குகிறது. நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சலுகைக் கட்டணம் அமலில் இருக்கும். போக்குவரத்து சம்மன்களுக்கான இந்த கட்டணக் கழிவைப் பெறுவதற்கு அனைத்து சம்மன்களுக்கும் மைடிஜிட்டல் ஐடி பயன்படுத்தி உள்ளீடு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








