ஓர் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் ரிங்கிட் மதிப்பு நேற்று 6 வெள்ளி 64 காசுக்கு வீழ்ச்சியுற்றதாக கூறப்படுவதை மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா மறுத்துள்ளது.
Google- லினால் வெளியிடப்பட்ட அந்த நாணய மதிப்பு துல்லியமானது அல்ல என்று பேங்க் நெகாரா விளக்கம் அளித்துள்ளது.
நேற்று ஜனவரி 5 ஆம் தேதி ஓர் அமெரிக்கா டாலருக்கு மலேசிய ரிங்கிட்டின் நிகரான மதிப்பு 4 வெள்ளி 74 காசாகும் என்று அது தெளிவுபடுத்தியது.








