Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வெள்ளப் பெருக்கு: பேராக் மற்றும் கெடாவில் நிலைமை மேம்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

வெள்ளப் பெருக்கு: பேராக் மற்றும் கெடாவில் நிலைமை மேம்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.28-

பேராக் மற்றும் கெடாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

தற்காலிக நிவாரண மையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 1,442 ஆகக் குறைந்துள்ளது. முந்தைய இரவில் இந்த எண்ணிக்கை 1,514 ஆக இருந்தது.

பேராக் மாநிலத்தில், மூன்று மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 குடும்பங்களைச் சேர்ந்த 437 ஆகக் குறைந்துள்ளது. முந்தைய இரவில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 467 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அதே வேளையில், கெடாவில், இன்று காலை நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 282 குடும்பங்களைச் சேர்ந்த 1,005 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இரவில், 311 குடும்பங்களைச் சேர்ந்த 1,047 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

Related News