பிரதமர் அன்வார் திட்ட வட்டம்
நாட்டின் தலைவர்கள் ஒரு பிரச்னை தொடர்பான அறிக்கைகளை வெளியிடும் போது, அவர்களுக்கு அவ்விவகாரம் தொடர்பான போதுமான அறிவு இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பினாங்கு மாநிலம் கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் அறிக்கை வெளியிட்டது தொடர்பாக இதனை தெரிவித்த பிரதமர் அன்வார், மலாயா கூட்டமைப்பு உருவானபோது ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து வரலாறு எழுதப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொருவரும் அதை மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்பு கெடா மாநிலத்திற்குச் சொந்தமாக இருந்த பினாங்கு மாநிலம், பின்னர் ஒவ்வொரு மாநிலமும் மலாயா கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அன்றைய கெடா சுல்தானால் கையெழுத்திடப்பட்டு தனி ஒரு மாநிலமாக விளங்கியது.
என எந்தவொரு விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிடுவதற்கு முன், தலைவர்கள் அது தொடர்பான அறிவை பெற்றிருப்பது மட்டுமின்றி மற்றும் படித்து செயல்பட வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.








