Oct 15, 2026
Thisaigal NewsYouTube

76 ஆவது இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், ஜன.28-

இந்தியாவின் 76-வது குடியரசுத் தின கொண்டாட்டம் நேற்று கோலம்பூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கொண்டாட்டத்தை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கோபிந் சிங் டியோ, ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இந்தியாவுக்கான தூதர் B.N. ரெட்டி உட்பட பல நாட்டுத் தூதர்கள், கல்விமான்கள், பெருளாதார வல்லுனர்கள் என நம் நாட்டிலுள்ள முக்கிய இந்திய பிரமுகர்கள் வந்திருந்தனர்.

ஆடல், நடனம், இசை என இந்தியப் பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு, மலேசியா பண்பாட்டு வகையிலும் மலாய் நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன.

சிறப்பு அம்சமாக கண்பார்வையற்றோர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக அறிவிப்புச் செய்ததோடு, பல மொழிகளில் பாடி வந்திருந்தவர்களை அசத்தினர்.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான உறவு நெடுநாள் பந்தம் ஆகும். மலேசிய இலக்கவியல் துறையில் அமைச்சர் கோபிந் சிங் அவர்கள் பல புதுமைகளையும் காலத்திற்கேற்ற மாற்றங்களையும் செய்து வருவதை மலேசியாவுக்கான இந்திய தூதர் B.N. ரெட்டி வெகுவாகப் பாராட்டினார்.

தவிர பெருளாதாரத் துறையிலும், சுற்றுலாதுறையிலும் மலேசியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான இரு வழி உறவை தொடர்ந்து வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் B.N. ரெட்டி வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது