Dec 28, 2025
Thisaigal NewsYouTube
உணவகத்தில் ரத்தக் களரி: கறிக்கத்தியுடன் பாய்ந்த கும்பல் - 13 வியட்நாமியரைக் கைது செய்த காவற்படை!
தற்போதைய செய்திகள்

உணவகத்தில் ரத்தக் களரி: கறிக்கத்தியுடன் பாய்ந்த கும்பல் - 13 வியட்நாமியரைக் கைது செய்த காவற்படை!

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.28-

ஜோகூர் பாரு, தாமான் மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று அதிகாலை கறிக்கத்திகளுடனும் இரும்பு நாற்காலிகளுடனும் ஒரு கும்பல் பயங்கர மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட கடன் தகராறு காரணமாக ஏற்பட்ட இந்த மோதலில், வாலிபர் ஒருவர் தலை, கை, கால்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வியட்நாம் பெண் உட்பட 13 பேரை காவற்படையினர் மின்னல் வேகத்தில் கைது செய்துள்ளதோடு, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கறிக்கத்திகளையும் கௌப்பேசிகளையும் பறிமுதல் செய்துள்ளதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்டக் காவற்படைத் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார். கைதானவர்களில் 6 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை வரும் ஜனவரி 3-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

ஸ்டேரிங் பூட்டால் சரமாரித் தாக்குதல்: ஜோகூரில் இ-ஹெயிலிங் ஓட்டுநருக்கு நேர்ந்த பயங்கரம்!

ஸ்டேரிங் பூட்டால் சரமாரித் தாக்குதல்: ஜோகூரில் இ-ஹெயிலிங் ஓட்டுநருக்கு நேர்ந்த பயங்கரம்!

குழந்தைகள் காப்பகத்தில் கொடூரம்: 6 மாதக் கைக்குழந்தையைத் தூக்கி எறிந்த பெண்

குழந்தைகள் காப்பகத்தில் கொடூரம்: 6 மாதக் கைக்குழந்தையைத் தூக்கி எறிந்த பெண்

பினாங்கில் கொழுந்து விட்டு எரிந்த தீ – குளியலறையில் சிக்கிய நபருக்குத் தீக்காயம்!

பினாங்கில் கொழுந்து விட்டு எரிந்த தீ – குளியலறையில் சிக்கிய நபருக்குத் தீக்காயம்!

915 சொகுசு கார்கள் பறிமுதல்: ஜே.பி.ஜே-வின் அதிரடி வேட்டையில் சிக்கிய ஃபெராரி, லம்போர்கினி!

915 சொகுசு கார்கள் பறிமுதல்: ஜே.பி.ஜே-வின் அதிரடி வேட்டையில் சிக்கிய ஃபெராரி, லம்போர்கினி!

ஜோகூர், புக்கிட் கெப்போங்கில் திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் கலக்கம்

ஜோகூர், புக்கிட் கெப்போங்கில் திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் கலக்கம்

கொள்கை நிலைத்தன்மையும் மக்களின் நம்பிக்கையுமே மடானி  அரசாங்கத்தின் வெற்றிக்கான அடிப்படை – பிரதமர் அன்வார் இப்ராஹிம் பெருமிதம்

கொள்கை நிலைத்தன்மையும் மக்களின் நம்பிக்கையுமே மடானி அரசாங்கத்தின் வெற்றிக்கான அடிப்படை – பிரதமர் அன்வார் இப்ராஹிம் பெருமிதம்