திவாலானவர்கள், தங்களின் திவால் நடவடிக்கையிலிருந்து மீண்டு வருவதற்கு ஏதுவாக அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்க வகை செய்யும் 2023 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட திவால் சட்டம் நாளை அக்டோபர் 6 ஆ ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்தார்.
திவாலானவர்கள் தொடர்ந்து தலைக்குனிவுக்கு ஆளாகி, தங்களின் நிதி நடவடிக்கையை எதிலும் வைத்துக்கொள்ள முடியாமல் அவதியுற்று வருவதை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக அவர்கள் மீது அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக திவால் சட்டம் திருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் அவர்கள் தங்களின் நிதி நடவடிக்கையை முறைப்படுத்திக் கொண்டு நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் விளக்கினார்.








