குறைந்த விலை விமானச் சேபை நிறுவனமான மைஏர்லைன் எஸ்டிஎன் பிஎச்டி தனது விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது தொடர்பில்
திடீரென அறிவிப்பை வெளியிட்டது முறையான செயல் அல்ல என மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் MTUC குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தகவல் அளித்தன் அதன் பொதுச் செயலாளர் கமருல் பஹாரின் மன்சோர் தெரிவிக்கயில், இந்தத் திடீர் நடவடிக்கையாலும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான ஊதியத்தையும் அந்நிறுவனம் முறையாக வழங்க வில்லை எனக் குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாததால், நிறுவனத்தில் தங்களின் உண்மையான நிலை என்ன என்பது இன்னும் ஊழியர்களுக்கு புரியாதப் புதிராகவே இருப்பதாக கமருல் பஹாரின் தெரிவித்தார்.
அக்டோபர் 12 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நிறுவனத்தின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வேலைக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
"ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள், ஆனால் ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. இது ஊழியர்களுக்கு தங்களின் நிலை குறித்து தெளிவில்லாத நிலையே தொடர்கிறதாக அவர் மேலும் கூறினார்.
இவ்விவகாரம் குறித்து இன்று சிப்பாங் மாவட்டக் காவல் துறை அலுவலகத்தில்மைஏர்லைன் ஊழியர்களுடன் சேர்ந்து புகார் அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமருல் பஹாரின் அவ்வாறு கூறினார்.
ஊதியம் வழங்கப்படாததோடு சில மாதங்களாக ஊழியர் சேமநிதி, பெர்க்கேசோ ஆகிய சந்தாக்களும் செலுத்தப்படவில்லை எனத் தங்கள் புகாரில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இவ்விவகாரம் தொடர்பில் மனிதவள அமைச்சு தலையிட்டு சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.







