Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பாதுகப்பான இடத்திற்கு வெளியேறுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாதுகப்பான இடத்திற்கு வெளியேறுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

டிச. 8-

நாடு முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்கள், தேசிய பேரிடர் மேலாண்மை மன்றத்துடன் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டடங்கள் அல்லது வீடுகள் குறித்த தகவல்களை சேகரிக்க உதவும்படி வீட்டுவசதி, உள்ளாட்சித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அதன் துணை அமைச்சர் Datuk Aiman Athirah Sabu கூறுகையில், இதுவரை இழப்பு குறித்த புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை எனவும் தொடர்புடைய தகவல்களை சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஹமது தரப்பு முன்கூட்டியே தயாராக உள்ளதுஎனக் கூறிய Aiman Athirah, இப்பேரிடர் காலத்தில் கட்டடங்கள் அல்லது வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது வழக்கமானதாக இருந்த போதிலும், எந்தவொரு சேதமும் மதிப்பிட சரியான பதிவு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மக்கள் தற்போதைய வானிலை நிலைமையை கவனித்து, தேவைப்பட்டால் முன்கூட்டியே தங்கள் இருப்பிடத்தில் இருந்து பாதுகப்பான இடத்திற்கு வெளியேறுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →