Jul 25, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் மீண்டும் ஃபார்முலா 1 போட்டி:  இறுதி முடிவு அரசிடம் இருப்பதாக பெட்ரோனாஸ் விளக்கம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் மீண்டும் ஃபார்முலா 1 போட்டி: இறுதி முடிவு அரசிடம் இருப்பதாக பெட்ரோனாஸ் விளக்கம்

Share:

மலேசியாவில் மீண்டும் ஃபார்முலா 1 கார் பந்தயத்தை நடத்துவது தொடர்பான இறுதி முடிவானது, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சிடமும், சம்பந்தப்பட்ட அரசாங்கத் தரப்புகளின் அதிகார வரம்பிற்குள்ளும் இருப்பதாக பெட்ரோனாஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பெட்ரோனாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வணிக நிறுவனமாக, தங்களின் வணிகம் மற்றும் மூலோபாய முன்னுரிமைகளுக்கு ஏற்ப வாய்ப்புகளை தொடர்ந்து ஆராயவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில், நாட்டிற்கு நீண்டகால நிலையான மதிப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவுள்ளதையும் பெட்ரோனாஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

முன்னதாக, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் முகமது தௌபிக் ஜோகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்காசிய போர் சூழல் காரணமாக பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி நடைபெற முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் செப்பாங் அனைத்துலக சுற்றுப் பாதையில் ஃபார்முலா 1 போட்டியை மீண்டும் நடத்துவது குறித்து அமைச்சு ஆலோசனைகளையும், சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News