கோலாலம்பூர், அக்டோபர்.03-
இம்மாதம் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை அழைத்து இருக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு மலாய்க்கார வர்த்தர்கள் மற்றும் தொழில்துறையினர் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபரின் வருகைக்கு பாஸ் கட்சி உட்பட சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் டிரம்பின் கோலாலம்பூர் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று மலாய்க்கார வர்த்தகர்கள் வர்ணித்துள்ளனர்.
அமெரிக்கச் சந்தைக்கான அணுகல், அரசதந்திர உறவு மற்றும் வர்த்தக உறவுகளைப் பேணுவதற்கு டிம்பின் வருகையை முற்போக்கான சிந்தனையுடன் காண வேண்டும் என்று மலாய்க்கார வர்த்தகர் மற்றும் தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் அஸாமானிஸாம் பஹாரொன் தெரிவித்தார்.








