Sep 11, 2026
Thisaigal NewsYouTube
நஜிப் பொதுமன்னிப்பு மனுவில் திடீர் திருப்பம்: அடுத்த கூட்டத்தில் பரிசீலனை செய்ய மாமன்னர் முடிவு
தற்போதைய செய்திகள்

நஜிப் பொதுமன்னிப்பு மனுவில் திடீர் திருப்பம்: அடுத்த கூட்டத்தில் பரிசீலனை செய்ய மாமன்னர் முடிவு

Share:

அரசியல் வட்டாரங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் 1எம்டிபி ஊழல் குற்றங்களுக்கான பொதுமன்னிப்பு கோரும் மனுவானது, அடுத்த கூட்டரசுப் பிரதேச பொதுமன்னிப்பு வாரியக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜிப்பின் மனுவை அடுத்த கூட்டத்துக்கு ஒத்திவைக்க ஒப்புதல் அளித்ததாக பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளையில் இன்றைய கூட்டத்தில், 65 கைதிகளை விடுதலை செய்யவும் மாமன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

விடுதலை செய்யப்படும் வெளிநாட்டு கைதிகள் அனைவரும் அடுத்த 6 மாதங்களுக்குள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

72 வயதான நஜிப், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிதியில் இருந்து 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் 6 ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் பொதுமன்னிப்பு வாரியம் அவரது சிறைத் தண்டனையை 6 ஆண்டுகளாகவும், அபராதத்தை 50 மில்லியனாகவும் குறைத்தது.

மேலும், 2025 டிசம்பரில் 1எம்டிபி தொடர்பான 2 பில்லியனுக்கும் அதிகமான தொகை சம்பந்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி வழக்கில், நஜிப்புக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News