Sep 11, 2026
Thisaigal NewsYouTube
ஆயர் தாவாரில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான கேபள் திருட்டு -  3 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஆயர் தாவாரில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான கேபள் திருட்டு - 3 பேர் கைது

Share:

பேராக் மாநிலம் ஆயர் தாவார் பகுதியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் டிஎன்பி மின்கம்பிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 1000 மீட்டர்கள் மின்கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தலைமையிலான போலீசார், நேற்று வியாழக்கிழமை காலை சுமார் 7 மணியளவில் லோரி ஒன்றை இடைமறித்து சோதனை செய்தனர்.

அதில் டிஎன்பி அடையாளக் குறியீடுகளுடன் கூடிய கேபிள்கள் 43 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 3 பேரும் மேலதிக விசாரணைக்காக செப்டம்பர் 13-ஆம் தேதி வரை 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related News