2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத சேர்க்கைக்கான புதிய ஊடக வடிவமைப்பு பட்டயப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முழுமையான கல்விக் கட்டண உதவித்தொகை வழங்கப்படுவதாக பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பாய்ண்ட் கல்லூரி அறிவித்துள்ளது.
இந்த உதவித்தொகையின் படி, 34 ஆயிரத்து 400 ரிங்கிட் மதிப்பிலான கல்விக் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், மாணவர்கள் 2 ஆயிரம் ரிங்கிட் பதிவு கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.எம். தேர்வில் குறைந்தது 3 பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பட்டயப் படிப்பிற்கான காலம் 2 ஆண்டுகள் 6 மாதங்கள் ஆகும்.
வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில், இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கும் போது “டாக்டர் சிவா உதவித்தொகைத் திட்டம்” எனக் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைவான இடங்களே இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








