Nov 25, 2025
Thisaigal NewsYouTube
கனமழையிலும் வட மாநிலங்களில் இரயில் சேவைகளில் தடை இல்லை - கேடிஎம்பி தகவல்
தற்போதைய செய்திகள்

கனமழையிலும் வட மாநிலங்களில் இரயில் சேவைகளில் தடை இல்லை - கேடிஎம்பி தகவல்

Share:

கங்கார், நவம்பர்.25-

மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழையும், வெள்ளப் பாதிப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், வட மாநிலங்களில் இயங்கி வரும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் தடையின்றி வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

என்றாலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சில தாமதங்கள் பதிவாகியுள்ளன.

தொடர் கனமழைக்கு மத்தியில் வட மாநிலங்களில் உள்ள பல்வேறு இரயில் பாதைகளில் நீர் மட்டங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக கேடிஎம்பி தெரிவித்துள்ளது.

கேடிஎம்பி நிறுவனத்தின் செயல்பாட்டுக் குழுவினர் அதிக எச்சரிக்கையுடன் நிலைமையைக் கண்காணித்து வருவதோடு, அதிகாரப்பூர்வப் பக்கங்களில் உடனுக்குடன் தகவல் தெரிவித்து வருவதாகவும் கேடிஎம்பி தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.

பெர்லிஸில் நேற்று கனமழை காரணமாக கேடிஎம்பி ஆராவ் இரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலை உட்பட பல்வேறு சாலைகள் மூடப்பட்டன.

இது போல் பல்வேறு மாநிலங்களில் கனமழை காரணமாக சாலைகள் பல மூடப்பட்டு வருகின்றன.

Related News