கோலாலம்பூர், அக்டோபர்.08-
லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசு வீதம் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் புடி 95 பெட்ரோல் திட்டத்தை இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கிய புடி 95 திட்டம் இன்று அக்டோபர் 8 ஆம் தேதி மாலை 4 மணி வரை 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
சலுகை விலையில் இத்தகைய பெட்ரோல் பெறுவதற்கு மலேசியாவில் 16 மில்லியன் மக்கள் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், இதுவரை 10 மில்லியன் மக்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








