கோலாலம்பூர், டிசம்பர்.28-
கொள்கை உறுதியும் துணிச்சலான சீர்திருத்தங்களுமே மடானி அரசின் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதத்துடன் முழங்கியுள்ளார். தரமான முதலீடுகளாலும் குவியும் வேலை வாய்ப்புகளாலும் நாட்டின் பொருளாதாரம் தற்போது அசுர வேகத்தில் வலுப்பெற்று வருகிறது. உலகத் தலைவர்களுடனான வலுவான உறவும் பன்னாட்டு நிலையிலான வியூகங்களும், உலக அரங்கில் மலேசியாவை ஒரு சக்தி வாய்ந்த நாடாகப் பறைசாற்றியுள்ளது.
இந்தச் சாதனைகள் வெறும் காகித எண்கள் மட்டுமல்ல, இவை மக்களின் அன்றாட வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் நேரடி நன்மைகள் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். புதிய பொருளாதார வாய்ப்புகள் முதல் பாதுகாப்பான எதிர்காலம் வரை, ஒரு வலிமையான தேசத்தை உருவாக்கும் இலக்கில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. மக்களின் பேராதரவுடன், நேர்மையான நிர்வாகமும் செழிப்பான மலேசியாவை நோக்கி மடானி அரசு தொடர்ந்து வெற்றி நடை போடும் என அவர் உறுதி அளித்தார்.








