Dec 3, 2025
Thisaigal NewsYouTube
செட்டிங் முறை, 18 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட 27 பேருக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

செட்டிங் முறை, 18 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட 27 பேருக்குத் தடுப்புக் காவல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

விமான நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல், அந்நிய நாட்டவர்கள் மலேசியாவிற்கு நுழைவதற்கு செட்டிங் முகப்பிட ஏற்பாட்டைச் செய்த கும்பலுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று நம்பப்படும் 18 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 27 பேரில் 13 பேர் புத்ராஜெயா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மூன்று நாள் தடுப்புக் காவல் அனுமதி பெற்றப்பட்டது.

எஞ்சியவர்கள் ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மலாக்கா ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றில் நிறுத்தப்பட்டு தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய 27 பேரில் 19 பேர் ஆண்கள் என்றும் 8 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related News