Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பூட்டி வைக்கப்பட்ட பெண், ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பூட்டி வைக்கப்பட்ட பெண், ஆடவர் கைது

Share:

கடந்த புதன்கிழமை, புக்கிட் மெர்த்தாஜாமில்உள்ள Taman Sanctuary, மாச்சாங் புபோக் இல் உள்ள ஒரு வீட்டில் பெண்மணி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார், அவர் அண்டை நாட்டுக்கு வேலைக்காக அனுப்பப்பட இருப்பதாகவும், இதனை ஆட்கடத்தல் கும்பலால் மேற்கொள்ளப்பட்டதாகவும் செபெராங் பெராய் தெங்ஙா மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி தான் செங் சான்தெரிவித்தார்.

அந்த 22 வயது பெண்மணி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் 34 வயது ஆடவர் ஒருவர் இவ்விவகாரம் குறித்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தான் செங் சான் தெரிவித்தார்.

வொசாரணைக்காக அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் கூட்டாக இணைந்து செயல்படுவதாக நம்பப்படும் இன்னும் சிலரை காவல் துறை தேடி வருவதாகவும் அவர் சொன்னார்.

Related News