சபா, கோத்தா கினபாலுவில் பேரங்காடி மையம் ஒன்றில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொய்யான செய்தியை சமூக வலைத்தளஙகளில் தாம் பகிர்ந்துக் கொண்டதாக ஆடவர் ஒருவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
தம்முடைய இந்த செயலுக்காக பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தாம் பகிர்ந்து கொண்ட காணொளி உண்மையானது அல்ல என்றும், இதனால் பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட அசெகரியங்களுக்கு தாம் மன்னிப்பு கோருவதாக அந்த ஆடவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் தெரிவித்துள்ளார்.








