Mar 18, 2026
Thisaigal NewsYouTube
GM Klang வர்த்தகச் சமூக செயலியின் “GMK WOW DAY
தற்போதைய செய்திகள்

GM Klang வர்த்தகச் சமூக செயலியின் “GMK WOW DAY

Share:

கிள்ளாங், மார்ச் 2 -

கிள்ளானில் மொத்த விற்பனை மையமான ஜி.ம் கிள்ளாங் வர்த்தக தளத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வாடிக்கையாளர்கள் திளைத்திருக்கும் “GMK WOW DAY” என்ற திட்டம், பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் மிக கோலாகலமாக இன்று தொடங்கப்பட்டது.

மார்ச் மாதத்தின் முதலாவது சனிக்கிழமையான இன்று, ஜி.ம் கிள்ளாங் கில், பிரெமியும் உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொண்டுள்ள ஜி.ம் கிள்ளாங் வர்த்தகச் சமூக செயலி பயனர்களுக்கு நன்மை அளிக்கும் “GMK WOW DAY” திட்டத்தின் மூலம் பலன் பெறலாம்.

குறிப்பாக, பொருட்களின் விலையில் 70 விழுக்காடு வரை தள்ளுபடி மற்றும் சிறப்பு வெகுமதிகளை பெற முடியும் என்று ஜி.ம் கிள்ளாங் கின் முத்திரை தொடர்பு உதவி நிர்வாகி முகமட் சர்ஹான் வாசிம் பின் ஷெ முட் தெரிவித்தார்.

ஜி.ம் கிள்ளாங் , வர்த்தக மையத்தில் இடம் பெற்றுள்ள GMK WOW SALE விற்பனை கடைகளில் பலதரப்பட்ட பொருட்களை பிரத்தியேக விலையில் வாங்குவதற்கு இத்திட்டம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக வழக்கமான விலையை விட மிக குறைந்த விலையில் அல்லது ஓன் லைன் விலையில் வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு சிறப்பு வெகுமதிகள் காத்திருக்கின்றன.

தவிர, வருகையாளர்கள் செலவிடப்படும் ஒவ்வொரு 100 வெள்ளிக்கும் 10 வெள்ளி மதிப்பில் இ வௌச்சர் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதத்திலும் முதல் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் “GMK WOW DAY” காலகட்டத்தில் மட்டுமே இந்த சிறப்பு அனுகூலங்களையும் பெற முடியும் என்று முகமட் சர்ஹான் வாசிம் குறிப்பிடுகிறார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு