Oct 17, 2026
Thisaigal NewsYouTube

வயது குறைந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு ஓடிய நபர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வயது குறைந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு ஓடிய நபர் கைது

நவ. 27-

சிங்கப்பூரிலிருந்து 15 வயது பெண்ணை அழைத்துக்கொண்டு, குவந்தானுக்கு தப்பி விட்ட சீன நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் அந்த இளம் பெண்ணையும் போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கல்வி பயிலும் தனது 15 வயது மகள் கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு வரவில்லை என்று ஒரு சீனப்பிரஜையான அப்பெண்ணின் 48 வயது தந்தை செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட துரித தேடுதல் நடவடிக்கையில் 22 வயதுடைய அந்த சீன நாட்டு ஆடவர் குவந்தானில் கைது செய்யப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

, கடந்த ஞாயிற்றுக்கிழமை, சம்பந்தப்பட்ட சீனப்பிரஜை, அந்த 15 வயது பெண்ணுடன் சிங்கப்பூர், வூட்லண்ட் சோதனை சாவடி வாயிலாக மலேசியாவிற்குள் நுழைந்து இருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக டத்தோ குமார் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
வயது குறைந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு ஓடிய நபர் கைது | Thisaigal News