May 22, 2026
Thisaigal NewsYouTube
எல்.ஆர்.டி ரயில் திட்டம் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது
தற்போதைய செய்திகள்

எல்.ஆர்.டி ரயில் திட்டம் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது

Share:

பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக நிர்மாணிக்கப்படவிருக்கும் ஆயிரம் கோடி வெள்ளி செலவிலான எல்.ஆர்.டி ரயில் போக்குவரத்து திட்டம், பினாங்கு தீவிலிருந்து ரயில் பாலம் வாயிலாக பட்டர்வொர்த் வரை விரிவுப்படுத்தப்படும் என்று மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.

இந்த பாலம் North Channel வாயிலாக செபெராங் பெராய்- யில் உள்ள பினாங்கு செண்ரல்- லில் முடிவுறும். இது பட்டர்வொர்த்தில் உள்ள மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் ரயில் நிலையம், பெர்ரி படகுத்துறை , பேருந்து முனையம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுவதற்காக எல்.ஆர்.டி ரயில் திட்டம் மீதான ஆய்வறிக்கையை Mass Rapid Transit Corporation Sdn. Bhd நிறுவனம் தற்போது தயாரித்து வருகிறது.

இத்திட்டம் தொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு உரிய விளக்கமளிப்பை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கியுள்ளதாக சௌ கோன் இயோவ் குறிப்பிட்டுள்ளார்.

Related News