தங்கும் வசதியைக் கொண்ட தாஹ்விஸ் சமயப்பள்ளி கட்டடம் தீப்பற்றிக்கொண்டதில் அப்பள்ளியை சேர்ந்த 20 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் பின்னிரவு 12.55 மணியளவில் சிலாங்கூர்,கோல லங்காட், தெலோக் பங்லிமா காராங்கில் கம்போங் மேடான்னில் நிகழ்ந்தது. பள்ளி கட்டடத்தின் நாலாபுறமும் தீ சூழ்ந்து விட்ட நிலையில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 13 க்கும் 17 க்கும் இடைப்பட்ட வயதுடைய மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேறி, உயிர்த்தப்பினர். இச்சம்பவத்தில் அந்த சமயப்பள்ளியின் கட்டடம் 70 விழுக்காடு சேதமுற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் வான் முஹமாட் ரசாலி தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


