திருநங்கை என்று நம்பப்படும் நபர் ஒருவர், ஜோகூர்பாரு, தாமான் தம்போய் உத்தாமா, ஜாலான் பெர்க்காசாவில் மோட்டார் சைக்கிள் சுரங்கப்பாதையோரத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த திருநங்கையின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களால் கண்டு பிடிக்கப்பட்டு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோக் காமால் சாமான் மாமாட் தெரிவித்தார்.
நேர்த்தியான உடையில் காணப்பட்ட அந்த நபரின் தலையிலும், முகத்திலும் பலத்த காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
அவர் மேட்டுப்பகுதியில் உள்ள பிரதான சாலையில் இருந்து சுரங்கப்பாதைக்கு செல்லும் நுழைவாயிலில் விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.








