Oct 13, 2026
Thisaigal NewsYouTube

சாலை சமிக்ஞை விளக்கில் நின்று கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள்களை கார் மோதியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

சிரம்பான், மார்ச்.07-

சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்று கொண்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை கார் ஒன்று மோதித் தள்ளியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் சிரம்பான், மாத்தாஹாரி ஹைட் பகுதியில் நிகழ்ந்தது. இந்த விபத்தில் மொடெனாஸ் கிரிஸ் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த 15,16 வயதுடைய இரு இளைஞர்கள் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

இதர மூவர் கடும் காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹத்தா சே டின் தெரிவித்தார்.

17 வயதுடைய பயணியுடன் ஹொண்டா ஜாஸ் வாகனத்தில் பயணித்த 18 வயது நபர், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்