சிரம்பான், நவம்பர்.19-
கடந்த மார்ச் மாதம் அபயாகரமாக வாகனத்தைச் செலுத்தி, மூவருக்கு மரணத்தை விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 17 வயது இளைஞர் செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவை சட்டத் துறை அலுவலகம் நிரகாரித்தது.
இவ்வழக்கு விசாரணை இன்று சிரம்பான் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சைஃபுல் சயொதி முன்னிலையில் நடைபெற்ற போது, அந்த பதின்ம வயதுடைய இளைஞர் சமர்ப்பித்த பிரதிநிதித்துவ மனுவைச் சட்டத்துறைத் தலைவர் நிகராரித்து விட்டதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் பி. ரூபினி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் Jalan Persiaran Senawang- கில் நிகழ்ந்த இந்த விபத்தில் 15 வயது Aidil Ramdan Abdullah, 15 வயது Muhamad Aswari Lotpi மற்றும் 17 வயது Aisar Azim Abdullah ஆகியோர் உயிரிழந்தனர்.








