ஈப்போ, நவம்பர்.05-
மாணவர்கள் மத்தியில் சமூக சீர்கேடுகள் அதிகரித்து வருவது குறித்து மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா அச்சம் தெரிவித்துள்ளார்.
"குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானப் புகலிடமாக இருக்க வேண்டிய பள்ளிகள், தற்போது அவர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் சூழல்களுக்கு ஆளாகின்றன.”
17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையே பகடிவதை, வன்முறை, பாலியல் பலாத்காரம், மரணங்கள், கொலைகள் போன்ற பள்ளி சூழலில் நிகழக்கூடிய சம்பவங்கள் அண்மையாக காலமாக நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருவதாக சுல்தான் குறிப்பிட்டார்.
இந்த சம்பவங்களானது மனித மதிப்புகளை வளர்ப்பதில் கல்வி தனது பங்கை நிறைவேற்றத் தவறியதை பிரதிபலிக்கின்றன. இதன் விளைவாக உணர்ச்சிகரமான நெருக்கடிகள் மற்றும் உளவியல் துயரங்கள் ஏற்படுகின்றன.
எனவே பள்ளிகளிலும், உயர்க்கல்விக்கழகங்களிலும் மாணவர்கள் மத்தியில் ஆளுமைக்குரிய சுய அடையாளம் நிறுவப்பட வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.
இன்று ஈப்போவில் Dewan Bankuet Bangunan Perak Darul Ridzuan-னில் 2025 ஆம் ஆண்டுக்கான ஒருமைப்பாடு மாதம் நிகழ்வில் உரையாற்றுகையில் சுல்தான் நஸ்ரின் ஷா மேற்கண்டவாறு தெரிவித்தார்.








