கோலாலம்பூர், ஜூலை.25-
தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் எல்லைப் பகுதியில் நிகழ்ந்து வரும் மோதல் குறித்து மலேசியா கவலை தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பகுதியில் நிகழ்ந்து வரும் இராணுவ மோதல் தொடர்ந்து உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்புக்கு வித்திட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.
ஆசியானுக்கு மலேசியா தலைமையேற்றுள்ள நிலையில் அந்த கூட்டமைப்பில் முக்கிய உறுப்பு நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையில் மோதல் வலுத்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று காலையில் இரு நாடுகளின் இராணுவப் படையினரும் மோதிக் கொண்டதில் கணிசமான அளவில் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதட்டத்தைத் தணிக்க இரு நாடுகளும் உடனடியாக சமரப் பேச்சு வார்த்தையில் இறங்க வேண்டும் என்று முகமட் ஹசான் கேட்டுக் கொண்டார்.








