May 21, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு சிறந்த அரசாங்க கொள்கை முக்கியம் - பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு சிறந்த அரசாங்க கொள்கை முக்கியம் - பிரதமர் அன்வார்

Share:

மலேசியாவில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் தக்க வைப்பதற்கும் சிறந்த கொள்கைகளை வகிக்க அரசாங்கம் முக்கிய பங்கு அளிக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

உருவாக்கப்படுகின்ற கொள்கைகள், முன்முயற்சிகள் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தொழில்துறைகளுடன் கையாளும் அணுகுமுறையாக புகுத்தப்பட வேண்டும் என்று நேற்று முகநூல் அகப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தொழில்துறையில் புதிய பணியாளர்களின் சிக்கலை தவிர்ப்பதற்கு அதற்கான திறன் மையங்களை தலையேற்று நடத்த தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதையும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

Related News